Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வெளிநாடு வாழ் தமிழர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை…. புதிய இணையதளத்தை வெளியிட்ட தமிழக அரசு!

வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப பிரத்யேக இணையதள முகவரியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,19,240ஆக உயர்ந்துள்ள நிலையில், 2,28,194 பேர் உயிரிழந்துள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ள நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு நாடுகளில் விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் ஏராளமான தமிழர்கள் சிக்கியுள்ள நிலையில், அவர்களை தாயகம் அழைத்து வருவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு எடுத்துள்ளது. அந்த வகையில் தமிழகம் திரும்ப விரும்புவோர் nonresidenttamil.org என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

வெளி நாடுகளில் இருக்கும் தமிழர்களில் உடனடியாக தமிழ்நாட்டிற்கு திரும்ப விரும்பும் நபர்களின் நலனுக்காகவும், அவர்களின் குடும்பத்தினரின் நலனை காத்திடும் நோக்கிலும், அவர்களது எண்ணிக்கையினை அறியும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு திரும்புகிறவர்களுக்கு தனிமைப்படுத்துதல் வசதிகள் ஏற்படுத்திடவும், அவர்களைப் பற்றிய தகவல்களை பெறுவதற்காக இணைய பதிவு வசதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |