Categories
மாநில செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்ப விரும்புவோருக்காக பிரத்யேக இணையதளம் வெளியீடு..!

வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப பிரத்யேக இணையதள முகவரியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. http://nonresidenttamil.org என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் இந்த இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சியுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் விமான சேவை முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், சுற்றுலா விசாவில் சென்றவர்கள், மேற்படிப்பு படிக்க வெளிநாடு சென்றவர்கள் என பலரும் வெளிநாடுகளில் சிக்கி தவித்து வருகின்றனர்.

அவ்வாறு வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களின் விவரங்களை சேகரிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தற்போது ஒரு புதிய இணையதள வசதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழக பரிசு இது தொடர்பாக ஒரு செய்தி குறிப்பையும் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 25ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதனால் சர்வதேச விமான போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.

இதனால் தமிழ்நாட்டை சேர்ந்த பல மாணவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் தாயகத்திற்கு திரும்ப இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் உடனடியாக தமிழ்நாட்டிற்கு திரும்ப விரும்புபவர்கள் http://nonresidenttamil.org என்ற இணையத்தில் பதிவு செய்யலாம். அதற்கு ஏற்றாற்போல் தமிழக அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |