டாக்டர் உள்ளிட்ட பல பெண்களை ஏமாற்றிய குமரி இளைஞன் பற்றி ஏற்கனவே தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளேன் என்று சின்மயி தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த 26 வயதுமிக்க இளைஞன் காசி என்ற சுஜி. பட்டதாரி வாலிபரான இவர் சென்னையை சேர்ந்த ஒரு பெண் டாக்டருடைய ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி, பயமுறுத்தி பணம் பறித்தார். அதனால் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பிறகு போலீஸ் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் தெரியவந்தது.
டாக்டரை போல பல இளம்பெண்களை மிரட்டி பணம் பறிப்பதையே வேலையாக வைத்து கொண்டிருக்கிறார் என்பது தெரியவந்தது. முதலில் இந்த அரக்கன் சமூக வலைத்தளங்களின் மூலம் பெண்களுடன் நட்பு கொண்டு அவர்களை ஆசை வார்த்தைகள் காட்டி மயக்கி அவருடைய வலையில் வீழ்த்தி, நெருக்கமாக இருக்க செய்து, அந்த ஆபாச காட்சிகளை போட்டோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என்று பயமுறுத்தி பணம் பறித்துள்ளார். இவருடைய லீலைகள் எல்லைமீறி போயிருக்கிறது, திருமணம் செய்து கொள்வேன் என்றெல்லாம் கூறி மயக்கியிருக்கிறார்.
உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருக்கும் வசதி உள்ள பெரிய குடும்பத்தை சேர்ந்த பல பெண்களிடமும் இந்த காமக்கொடூரன் லீலையில் ஈடுபட்டிருப்பதும் தெரிந்தது. இச்சம்பவம் குமரி மாவட்டத்தில் பலரின் மனதில் நெருப்பாய் எரிந்து கொண்டிருக்கிறது. இதை பற்றி பெண் டாக்டர் மற்றும் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஒரு பட்டதாரி பெண் என இரண்டு பெரும் துணிச்சலாக புகார் அளித்தனர். இப்பொழுது காம கொடூரன் காசி ஜெயிலில் இருக்கிறான்.