Categories
உலக செய்திகள்

அமெரிக்காவை விரட்டியடித்த சீனா….! தென் சீன கடலில் பதற்றம் ….!!

தென் சீனக் கடற்பகுதியில் அமெரிக்கப் போர்க் கப்பலை சீனப் போர்க்கப்பல் மற்றும் போர் விமானங்கள் விரட்டியுள்ளது 

தென் சீன கடல் பகுதியில் இருக்கும் பேரசல்  தீவுகளின் அருகே யூஎஸ்எஸ் பேர்ரி ரக அமெரிக்க போர் கப்பல் சென்றுள்ளது. அப்பகுதியை சீனா சொந்தம் கொண்டாடும் நிலையில் கடற்படைக் கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் மூலம் அமெரிக்க போர்க்கப்பல் விரட்டியக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சீன ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில் அமெரிக்க போர்க் கப்பல் தென் சீனக் கடல் பகுதிக்குள் நுழைந்தது எங்களை கோபம் கொள்ளச் செய்தது.

இறையாண்மையை மீறும் விதமாக அவர்களின் செயல் இருந்துள்ளது. ஸ்திரத்தன்மை மற்றும் பிராந்திய அமைதியை  சீர்குலைக்கும் முயற்சியைக் கைவிட்டு விட்டு கொரோனா தொற்றில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.  இதுகுறித்து அமெரிக்க கடற்படை வெளியிட்ட அறிக்கையில் அங்கீகரிக்கப்பட்ட கடலின் சுதந்திரங்கள் உரிமைகள் மற்றும் சட்டப்பூர்வமான பயன்பாடுகள் போன்றவற்றை வலியுறுத்த அமெரிக்கா முயற்சி செய்தது.

தென் சீன கடலில் சட்டத்திற்கு விரோதமான  கடல்சார் கூற்றுகள் கடல்களின் சுதந்திரத்திற்கு எடுத்துக்காட்டாக இல்லாத வகையில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. இதில் அதிகப்படியான பயணத்தின் சுதந்திரம், வழிசெலுத்தல் மற்றும் அனைத்து கப்பல்களும் கடந்து செல்லும் உரிமை போன்றவை அடங்கும் என அதில் கூறப்பட்டிருந்தது.

Categories

Tech |