Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…மகிழ்ச்சி அதிகரிக்கும்…பாராட்டுக்கள் கிடைக்கும்…!

 

மேஷம் ராசி அன்பர்களே …!  இன்று உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிடித்தவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களை பாராட்டக் கூடும். இனிமையான நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும்.

கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.பிள்ளைகளிடம் கனிவாக நீங்கள் நடந்து கொள்ளுங்கள். விருந்தினரின் வருகை இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் சாதகமான முடிவை இன்று கொடுக்கும்.  காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும். இன்றைய நாள் இறை வழிபாட்டுடன் தொடங்குங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு எப்பொழுதுமே  அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு செயல்படுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |