Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு… பொறுப்புகள் அதிகரிக்கும்… மனசஞ்சலம் ஏற்படும்…!

 

ரிஷபம் ராசி அன்பர்களே …!  குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது ரொம்ப நல்லது. யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்.உத்தியோகத்தில் பொறுப்புகளும் அதிகரிக்கும். இன்று மதியத்திற்கு மேல் உங்களுக்கு மன சஞ்சலம் கொஞ்சம் ஏற்படும்.  எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். குழப்பங்கள் ஓரளவு நீங்கும் தெளிவும் உண்டாகும்.

பண கஷ்டம் குறையும். பக்குவமாகக் எதையும் செய்தால் அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். பணம் பல வழிகளில் வந்தாலும் சில இடங்களில் இருந்து தொல்லைகள் தருவதாகவே அமையும். ஆனால் எந்த ஒரு வேலையிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. முடிந்தால்  குலதெய்வத்தை நீங்கள் வணங்கிவிட்டு காரியத்தை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் சிறப்பாக இருக்கும்.

உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்த விதப் பிரச்னையும் இல்லை. காதலர்களுக்கு இன்று ஓரளவு இனிமையான நாளாக தான் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப சிறப்பு. அது  உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ஒரு ரொம்ப சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் பச்சை நிறம்.

Categories

Tech |