Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…துணிச்சல் அதிகரிக்கும்…கவனம் தேவை …!

 

கடகம் ராசி அன்பர்களே …!  இன்று துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுக்க கூடும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பிரபலங்கள் உங்களுக்கு அறிமுகமாக கூடிய சூழல் அமையும். விசேஷங்களை முன்னின்று நடத்துவது பற்றிய சிந்தனை மேலோங்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள் தைரியம் கூடும்.

இன்று பேச்சைக் குறைத்து செயலில் ஈடுபடுவது நன்மையை கொடுக்கும்.குடும்பத்தில் சுமுகமான நிலை காணப்படும், ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை போன்றவை இருந்து கொண்டே இருக்கும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. தயவுசெய்து எப்பொழுதுமே வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடவேண்டாம் பார்த்துக் கொள்ளுங்கள்.

அதுமட்டுமில்லாமல் இன்று நிதி மேலாண்மையிலும் கவனம் இருக்கட்டும்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப சிறப்பு. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 6 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மற்றும் இளம் மஞ்சள் நிறம்

 

Categories

Tech |