Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு… உழைப்பு அதிகரிக்கும்…மனமகிழ்ச்சி அடைவீர்கள்…!

 

சிம்ம ராசி அன்பர்களே …!  எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். இன்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் காரியத்தை சிறப்பாகவே செய்வீர்கள். உங்களுடைய மகனுக்கோ அல்லது மகளுக்கு வரன் தேடுபவர்கள் நல்ல வரன் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி கொள்வீர்கள்.  வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். உழைப்பால் உயரும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். திடீர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அதன்மூலம் நன்மைகள் உண்டாகலாம். வீண் செலவுகள் கௌரவ குறைச்சல் போன்றவை ஏற்படலாம்.  தாய் தந்தையின் உடல் நிலையிலும் கொஞ்சம் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது. தயவுசெய்து தந்தையிடம்  எந்த வித கோபத்தையும் காட்ட வேண்டாம்.

இன்று காதலர்கள் கூடுமானவரை வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் இருப்பது தான் மிகவும் சிறப்பு. புதியதாக காதல் ஏற்படக் கூடிய சூழலும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். சிவப்பு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் இளம் மஞ்சள்.

Categories

Tech |