Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…வெற்றி கிடைக்கும்…உற்சாகம் அதிகரிக்கும்…!

 

தனுசு ராசி அன்பர்களே ..!   புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவிகளை செய்வார்கள். புதுமை படைக்கும் நாள். இன்று துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றியும் கண்டார்கள்.உற்சாகமாக காணப்படுவீர்கள்.

பயணங்களின் பொழுது தான் ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும், கவனமாக செயல்பட வேண்டும். உங்களுடைய திறமையால் முன்னேற்றம் ஏற்படும். கஷ்டமான சூழ்நிலையை இன்று திறமையாக வைத்து சமாளித்து விடுவீர்கள். இன்று எதைப்பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்காமல் காரியத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தை பொறுத்த வரை எந்தவித பிரச்சனையும் சுமூகமாகவே இருக்கும்.அது மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும் கவலை வேண்டாம்.

இன்று காதலர்கள் எந்தவித பிரச்சினையும் ஈடுபடாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. காதலர்களுக்கு திருமணத்தைப் பற்றிய பேச்சுவார்த்தை நடத்துங்கள் முன்னேற்றம் ஆக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும்.  அது உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களை  செய்யுங்கள் காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிஷ்ட எண்கள்: 7 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |