Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…கோபம் அதிகரிக்கும்…சிந்தனை மேலோங்கும்…!

 

மகர ராசி அன்பர்களே …!   இன்று தயவு செய்து நீங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மரியாதை கூடும். பிரபலங்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். அரசு விஷயங்களில் ரொம்ப கவனமாக தான் நீங்கள் செயல்பட வேண்டும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றலாம் என்ற சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமான சூழல் இருக்கும்.

எதிர்ப்புகள் விலகி செல்லும் நாளாகத்தான் இருக்கும். பிரச்சனைகள் சுமுகமான முடிவு ஏற்படும். தைரியம் கூடும், மூலதனமாக வைத்து வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வரக் கூடும். வாக்கு வன்மையால் எதையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். ஆனால் இன்று வாக்குறுதியில் மட்டும் தயவு செய்து கொடுக்க வேண்டாம். மிக முக்கியமாக யாரிடமும் கடன்கள் ஏதும் வாங்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம்.  உங்களுடைய திறமை இன்று அதிகரித்தாலும் அந்த திறமைக்கு வேலை இல்லாமல் போகும்.  ஆகையால் நீங்கள் பொறுமையாக இருங்கள்.

கூடுமானவரை இறை வழிபாடுகளில் கவனம் செலுத்த ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். இளம் மஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களைமேற்கொண்டால், காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை.

Categories

Tech |