Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…வாக்குவாதத்தை தவிர்க்கவும்…மதிப்பு கூடும்…!

 

மீனம் ராசி அன்பர்களே..!   இன்று குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து செல்லும். கல்யாணப் பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிவடையும். புதியவர்கள் நண்பர்களாவார்கள் வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வியாபாரம் சூடு பிடிக்கும். மேல்அதிகாரி உங்களை ஆதரிக்கக் கூடும். பிற்பகல் மேல் உங்களுக்கு அனைத்து விஷயமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும் கவலை வேண்டாம்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகளும் சரியாகும். எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவி இருவரும் எந்த ஒரு முடிவையும் நிதானமாக யோசித்து ஏற்பது நன்மையை கொடுக்கும்.அவசரத்தை தவிர்த்து விட்டாலே போதுமானது. அலட்சியத்தை கண்டிப்பாக தவிர்க்க தான் வேண்டும். சகோதர வழியில் உதவியை நீங்கள் எதிர்பார்க்கலாம். இன்று காதலர்களுக்கு இனிமையான நாளாக இருக்கும்.

ஆனால் காதலர்கள் பேச்சுவார்த்தையின்போது கோபப்பட வேண்டாம், வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப சிறப்பாகும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால்  அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் சிவப்பு.

Categories

Tech |