Categories
தேசிய செய்திகள்

கொரோனா தாக்குதலில் இந்தியா தப்பித்தது எப்படி?

வளர்ந்த நாடுகள் எல்லாம் கொரோனவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை மக்கள் மனதில் ஒரு கேள்வி ? கொரோனா தாக்குதலில், பெரும் பாதிப்பு ஏற்படாமல் இந்தியா தப்பித்தது எப்படி ? என்று மிக விரிவாக பார்க்கலாம்.

கொரோனா பாதிப்பில் உதாரணத்துக்கு அமெரிக்காவை எடுத்துக் கொண்டால். வால்லரசு நாடு என சொல்லப்படுவது. பொருளாதாரத்தில் உலகிலே நம்பர் ஒன் நாடு, ராணுவ பலத்திலும் உலகிலே நம்பர் ஒன் நாடு. அமெரிக்காவின் மக்கள் தொகை சுமார் 34 கோடி பேர் வசிக்கிறார்கள் . கொரோனா மரணம் என்று எடுத்துக்கொண்டால் சுமார் 62,000 பேர் மரணம் அடைந்துள்ளார்கள்.

இந்தியா :

அமெரிக்காவை காட்டிலும் 100 கோடி மக்கள் அதிகமாக இந்தியாவில் வசிக்கிறார்கள். இந்திய மக்கள் தொகை சுமார் 134 கோடி. மரணம் என்று வரும்போது நாம் 1000த்தை தாண்டியுள்ளோம். அதாவது 1000 எங்கே ? 62,000 எங்கே ? அறுபத்தி இரண்டு மடங்கு அதிகமாக அமெரிக்காவில் மரணம். அமெரிக்காவை பொருத்தவரை ஒரு கோடி பேருக்கு 1, 800 பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள். இந்தியாவை பொறுத்தவரை ஒரு கோடி பேருக்கு 8 பேர் மரணம்  அடைந்திருக்கிறார்கள்.

சீனா உத்தி என்ன ?  இந்தியா உத்தி என்ன ?

சீனாவை பொறுத்தவரை நாடு தழுவிய ஊரடங்கு என்று அவர்கள் செய்யவில்லை. நகரம் தழுவிய ஊரடங்கு சீனாவில் இருந்தத்த்து. இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு. இந்தியாவை பொருத்தவரை ஊரடங்கும் கை கொடுத்துள்ளது என்று மருத்துவர்கள் எல்லாரும் சொல்கிறார்கள். ஊரடங்கை பொறுத்தவரை பிரிட்டன், இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகள் செய்த தவறி இந்தியா செய்யவில்லை.

கொரோனா பாதிப்பின் ஆரம்பத்திலேயே ஊரடங்கில் குதித்த இந்தியா:

நாடு முழுவதும் ஊரடங்கு அறிவித்த போது பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என்று பார்த்தால் 3 நாடுகளை நாம் ஒப்பிடலாம். இந்தியாவில் 519 பேர் பாதித்திருந்த போதே இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை சுமார் 33 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே பிரிட்டன் எடுத்துக்கொண்டால் 6700 பேர் பாதிக்கப்படும் வரை அங்கே நாடு தழுவிய ஊரடங்கு கிடையாது. பிரிட்டனின் தற்போதைய பாதிப்பு சுமார் 1,66,000. இத்தாலியை எடுத்துக் கொண்டால் அவர்கள் இன்னும் பொறுமை காத்தார்கள். அதாவது 9200 பேர் பாதிக்கப்பட்ட பிறகுதான் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

தற்போது இத்தாலியின் பாதிப்பு 2 லட்சத்து 4 ஆயிரத்து கடந்து போய்க்கொண்டிருக்கின்றது. இதில் இருந்து நாம் உணரவேண்டியது யார் முதலில் ஊரடங்கு அறிவித்திருக்கின்றார்களோ அந்த நாடு கொரோனா பாதிப்பில் இருந்து தப்பி உள்ளது. மற்ற நாடுகளைவிட இந்தியா ஆரம்ப கட்டத்திலேயே ஊரடங்கை அறிவித்திருந்ததால் இங்கே உயிர் சேதம் அதிகம் இல்லை என்று சர்வதேச மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் விமான போக்குவரத்தை ஆரம்பத்திலேயே ரத்து செய்த இந்தியா. இதனால்  பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து இந்தியாவுக்கு மக்கள் வருவது பெருமளவில் தடுக்கப் பட்டது.

1 லட்சம் பேரில் எத்தனை பேர் சோதிக்கப்படுகின்றனர் :

இந்தியாவை பொறுத்தவரை ஒரு லட்சம் பேருக்கு 48 பேர் சோதிக்கப்படுகின்றனர். அமெரிக்காவை பொருத்தவரை 1,740 பேர் சோதிக்கப்படுகின்றார்கள். தென்கொரியாவை பொறுத்தவரை 1175 பேர் சோதிக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் கொரோனா தன் முழு வீரியத்தை காட்டாததற்கு காரணம் என்ன ?

இதற்க்கு விஞ்சானிகள் பல விதமான காரணங்கள் சொல்லுறாங்க. நிறைய நாடுகள் உடனடியாக எடுத்த நடவடிக்கை ஊரடங்கு. அதையும் தாண்டி எப்படி அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் பாதித்த அளவுக்கு இந்தியா பாதிக்கவில்லை. இதற்க்கு இந்திய வெளியில் காரணமா ? இந்தியாவின் தட்ப, வெட்ப சூழல் காரணமா ? என்று ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது.

விஞ்ஞானிகள், அப்படியும் இருக்கலாம், இருந்தாலும் அறிவியல் ஆதாரங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை,  இது குறித்து ஆய்வு நடைபெறுகிறது என்று சொல்கிறார்கள். இந்தியாவில் நாடு முழுவதும் குழந்தைகளுக்கு, TB தடுப்பூசி. இது மூன்றாவது காரணமாக சொல்லப்படுகின்றது. ஏனென்றால் இதே தடுப்பூசி கொரோனாவுக்கு வேலை செய்கிறதா என ஆய்வு நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே அந்த தடுப்பூசி போட்டு இருப்பதால் கொரோனாவின் பெரிய தாக்குதலில் இருந்து இந்தியா தப்பித்து விட்டதா ? என்ற கோணத்திலும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியா முன் நிற்கும் சவால்கள் ?

ஊரடங்கு நல்ல முடிவு என்றாலும் பலர் பசியில் வாடுகின்றனர். மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது. அதுமட்டுமல்ல குளிர்காலங்களில் வைரசின் வீரியம் அதிகரிக்கலாம். அக்டோபர், நவம்பர் மாதங்களில் அதிக எச்சரிக்கை தேவை என்று நிபுணர்கள் சொல்லியுள்ளார்கள்.

தடுப்பூசி தயாரிக்கும் வரை மக்களை வீட்டிலேயே முடக்க முடியாது. தடுப்பூசி எல்லாம் வருவதற்கு குறைந்தபட்சம் ஆறு மாதம் ஆகும். இன்னும் சரியான காலம் சொல்ல வேண்டும் என்றால் ஒரு வருடம் கூட ஆகலாம் என்று சொல்கிறார்கள். ஆனால் ஆறு மாதத்திற்குள் தடுப்புசி மக்களுக்கு வந்து சேராது என்று சர்வதேச விஞ்சானிகள் சொல்ல்கிறார்கள். மக்கள் அவரை வீட்டில் முடக்க முடியாது.

அரசின் உத்தி என்ன ? மாபெரும் எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளார்கள். அரசு எப்படி இதை கையாளப் போகிறது ? வாழ்வாதாரம் பாதிக்கப் படக்கூடாது, மக்களும் நோயில் சிக்கிக் கொள்ளக்கூடாது  அரசின் உத்தி என்ன ? என அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Categories

Tech |