கோடை காலத்தில் வெயில் மிகக் கடுமையாக இருக்கும் காலம் அக்கினி நட்சத்திரம், அக்கினி நாள் அல்லது கத்தரி வெயில் என்று அழைக்கப்படும். இது ஒவ்வோர் ஆண்டும் தமிழ்ப் பஞ்சாங்கப்படி ஞாயிறு (சூரியன்) பரணி விண்மீன் மூன்றாம் பாதத்தில் தொடங்கி கிருத்திகை மீன் முழுவதும் வலம்வரும் காலகட்டமாகும்.
சூரியன் மேட இராசியில் உலவும் உச்ச வெயில் காலம் அக்னி நட்சத்திரம் எனப்படும். அருச்சுனன் காண்டாவனம் எனும் இந்திரனின் வனத்தை எரித்த காலம் எனக் கூறப்படுகின்றது. அக்னி நட்சத்திர தோசம் என்று ஒரு தோசமும் ஜோசியத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
தாக்கம்:
இக் காலத்தில் பல முதியவர்கள் வெயிலின் கொடுமையால் இறப்பதுண்டு. ஊர்ப்புறத்தில் இக்காலத்தில் கோழி முட்டைகளை அடை கூட்டினால் அவை அதிக வெப்பத்தால் கூமுட்டையாகி விடுமென்ற நம்பிக்கையிருப்பதால் கத்தரி வெயில் முடிந்த பின்னரே கோழிகளை அடைகாக்க அனுமதிப்பர்.
வழிபாடு:
அக்னி நட்சத்திரத்தின் போது, திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலீஸ்வரருக்கு தாராபிஷேகம் செய்யப்படுவது வழக்கமாகும்.