Categories
லைப் ஸ்டைல்

கோடை வெப்பத்தின் தாக்கமும் அவற்றின் பாதிப்புகளும்..!!

கோடை வெப்பத்தின் தாக்கம் ஆரம்பமாகி விட்டது, அப்பொழுது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சிலவற்றை பார்க்கலாம்.

சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கம் மேலும் அதிகரிக்க போகிறது.  கொளுத்தும் வெயிலில் இருந்து வேறு இடத்திற்கு செல்வதற்கே ரொம்ப பயமாக இருக்கிறது. கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் மிகவும் மோசமான அளவிலேயே வெயிலின் தாக்கம் நம் மீது அதன் கொடூர பார்வையை செலுத்தி விடுகிறது.

கோடை காலம் தொடங்கிவிட்டாலே அனைவருக்குமே ஒரு வித தனி பயம் இருக்கும். வெயில் காலங்களில் வெளியில் செல்லும் பொழுது எவ்வளவு வெள்ளையாக இருந்தாலும், வீட்டிற்கு திரும்பும் பொழுது, நாம் யார் என்று நமக்கே தெரியாத அளவிற்கு மாறிவிடுவோம். அதுவும் இன்றைய நாட்களில் அதிகரிக்கும் கோடை வெயிலுக்கு, வெளியில் சென்றால் நிச்சயம் உங்களுக்கு பல்வேறு பாதிப்புகள்ஏற்படத்தான் செய்யும்.

நமது உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை இந்த வெயிலுக்கு பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம். சூரியனின் வெப்ப கதிர்கள் இன்றைய நாட்களில் நம் மீது நேரடியாக படுவதால் நிச்சயம் சருமம் பாதிக்கப்பட்டு முக அழகு கெடும்.

சூரியனின் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள்:

சூரியனிடமிருந்து வருகின்ற புற ஊதா கதிர்கள் நம் உடலின் மீது படும் பொழுது சூடு கட்டிகளை உருவாக்கி பாதிப்பு அளிக்கிறது.  ஆரம்ப கட்டத்தில் இதனால் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் இருந்தாலும்,  இதுவே நீடித்தால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். வெயில் காலங்களில் வெளியில் செல்வதால் அதிக அளவில் வியர்த்து கொட்டும்.

இவை நோய் கிருமிகளை எளிதில் உண்டாக்க செய்யும். அதிக அளவில் வியர்வை வரும் அதனால் நோய் தொற்றுகள் அதிக அளவில் ஏற்படும். அதிக வெயில் உடலில் பட்டு சருமத்தை பாதித்து வியர்குறுவை எளிதில் உண்டாக்கும். இதனால் தோலில் எரிச்சல் அதிகரித்து அந்த இடம் முழுவதையும் பாதிக்க செய்து விடும்.

சில பேருக்கு இவ்வாறு பாதிப்பது அக்கி போன்றோ அல்லது சிரங்கு போன்றோ மாறிவிடும். வெயிலின் தாக்கத்தால் தோலில் இருக்கும் ஈர தன்மை குறைந்து மிக வறட்சியாக மாறும். இவற்றை தடுப்பதற்கு அடிக்கடி உடலில் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை தேய்த்து கொள்ளுங்கள். இது போன்று செய்தால் வெயிலின் தாக்கத்திலிருந்து சருமத்தை காத்து கொள்ளும்.

 

Categories

Tech |