Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 35 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 35,043 ஆக உயர்வு..!

இந்தியாவில் 35 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,993 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 73 நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 38வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன.

இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,050 லிருந்து 35,043 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,074 லிருந்து 1,147- ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 459 பேரும், குஜராத்தில் 214 பேரும், மத்திய பிரதேசத்தில் 137 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 8,325 லிருந்து 8,889 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 10,498 பேரும், குஜராத்தில் 4, 395 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து டெல்லியில் 3,515 பேரும், மத்திய பிரதேசத்தில் 2660 பேரும், ராஜஸ்தானில் 2,584 பேரும், தமிழகத்தில் 2,323 பேரும், உத்தரபிரதேசத்தில் 2,203 பேருக்கும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மே 3ம் தேதியோடு 2ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கடந்த 27ம் தேதி நடைபெற்ற மாநில முதல்வர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை வைக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். இந்த நிலையில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணமாகவே இருப்பதால் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |