மே 3-க்குப் பிறகு தொழில் நிறுவனங்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக தொழில்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.
முதல்வர் முகாம் அலுவலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம், தொழில்துறை செயலாளர், நிதித்துறை செயலர் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். ஊரடங்கு முடிந்த பிறகு தொழில் நிறுவனங்களை படிப்படியாக திறக்க அனுமதிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறு, குறு நிறுவனங்களை திறப்பது குறித்தும் ஆலோசனையில் முடிவெடுக்கப்படுகிறது.
மே 3ம் தேதியோடு 2ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கடந்த 27ம் தேதி நடைபெற்ற மாநில முதல்வர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை வைக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். மேலும், நேற்று முன் தினம் தமிழக முதல்வர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அதில், பச்சை மண்டல பகுதியில் ஊரடங்கை தளர்த்துவது குறித்தும், மே 3ம் தேதி பிறகு எந்தெந்த தொழில்களை தொடங்கலாம் என்பது குறித்தும் அறிக்கை தர ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், இன்று தொழில் நிறுவனங்களை தொடங்குவது தொடர்பாக இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.