சட்டமேலவை தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்திருப்பதால் உத்தவ் தாக்கரேவின் முதல்வர் பதவி தப்பியுள்ளது.
மகாராஷ்டிராவில் சட்டமேலவை தேர்தல் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் தேர்தல் ஆணையம் சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்பாக மகாராஷ்டிராவின் தலைமைச் செயலாளர் ஒரு கடிதத்தை தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்திருந்தார். அதில் கொரோனா பாதிப்பு ஏற்பட இருக்க கூடிய சூழ்நிலை உரிய பாதுகாப்போடு சட்ட மேலவைத் தேர்தல் நடத்தலாம், அதில் எந்தவிதமான பிரச்சினையும் இருக்காது மாநில அரசின் சார்பில் இருந்து உரிய நடவடிக்கை எடுக்ப்படும் நீங்கள் அதற்கு ஒப்புதல் தர வேண்டுமெனக் கேட்டிருந்தார்.
இதற்கிடையில் நேற்றைய தினம் பிரதமர் மோடியை தொடர்புகொண்டு உத்தவ் தாக்கரே பேசியதாகவும் தகவல் வந்திருந்தது. இதை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது தற்போது நடந்து முடிந்த கூட்டத்தில் ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அதில் மகாராஷ்டிராவின் சட்ட மேலவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தனது ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இதனால் உத்தவ் தாக்கரே முதல்வராக உத்தவ் தாக்கரே தொடர்வதில் இருந்த சிக்கல் நீங்கியுள்ளது.