ரமலான் நோன்பு கஞ்சி செய்வது எப்படி என்று இப்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் – இரண்டு
லவங்கம் – 3
பட்டை துண்டு – மூன்று
வெந்தயம் – அரை டீஸ்பூன்
வெங்காயம் – 100 கிராம்
தக்காளி -1
பூண்டு – 8 பல்
இஞ்சி – 30 கிராம்
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி இலை – சிறிதளவு
கறிவேப்பிலை புதினா தழை – சிறிதளவு
ஆட்டுக்கறி – 50 கிராம்
பச்சரிசி – 100 கிராம்
பாசிப் பருப்பு – 25 கிராம்
உப்பு – தேவையான அளவு
தேங்காய்ப்பால் – அரை கப்
செய்முறை:
முதலில் அடுப்பில் குக்கரை வைத்து, குக்கர் சூடானதும் நெய் ஊற்றி அது கூடவே எண்ணெய் ஊற்றி சூடானதும், ஏலக்காய், லவங்கம், கிராம்பு, பட்டை, வெந்தயம் சேர்த்து கிளறி விடுங்கள். பின்னர் அதோடு உரித்து வைத்திருக்கும் பொடி வெங்காயம் சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். வெங்காயம் வதங்கிய பிறகு பொடிதாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியையும் சேர்த்து நன்றாக பச்சை வாடை போகும் வரை கிளறி விடுங்கள்.
வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கிய பிறகு உரித்து வைத்திருக்கும் பூண்டை சேர்த்து வதக்குங்கள். வதக்கும் பொழுது இஞ்சி நச்சு அதையும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை நீங்கும் அளவிற்கு கிளறிவிட வேண்டும். பின்னர் அதோடு 2 பச்சை மிளகாய் கீறி, இதோடு சேர்த்து, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா இலை இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள்.
கிளறிய பின்னர் ஆட்டுக்கறியை சேர்த்து நன்றாக கிளறுங்கள். பின்னர் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு கழுவி ஊற வைத்திருக்கும் பச்சரிசி, பாசிப்பருப்பு இவை இரண்டையும் சேர்த்து கிளறி விடுங்கள். கிளறிய பின்னர் 5கப் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். இப்பொழுது குக்கரை மூடிவைத்து 6 இலிருந்து 7 விசில் வரும் வரை வைத்து விடுங்கள். நோன்பு கஞ்சி நன்கு குழைவாக இருக்கவேண்டும்.
விசில் விட்டு முடிந்ததும் ஓபன் பண்ணி பாருங்கள். நன்றாக வெந்ததும் அதில் தேங்காய்ப்பால் அரை கப் ஊற்றி கிளறி, 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். ரமலான் நோன்பு கஞ்சி ரெடி…!