நாடு முழுவதும் 37 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு பகுதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35,043ஆக உள்ள நிலையில் உயிரிழப்பு 1,147- ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் 37 மாநிலங்களில் கொரோனா பாதித்த சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற பகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், சென்னை, மதுரை, ராணிப்பேட்டை, திருவாரூர், காஞ்சிபுரம், விருதுநகர், நாமக்கல், தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், வேலூர் ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல் அளித்துள்ளனர்.
ஆரஞ்சு மண்டலமாக 24 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கரூர், தூத்துக்குடி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், நெல்லை, நீலகிரி, சிவகங்கை, தேனி, தென்காசி, நாகை, திண்டுக்கல், தருமபுரி, திருச்சி, விழுப்புரம், கோவை, கடலூர், சேலம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் பச்சை மண்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் இடம் பெற்றுள்ளது. கிருஷ்ணகிரியில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. நீலகிரி, ஈரோடு, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை சிவகங்கை, கன்னியாகுமரி ஆகியவை ஆரஞ்சு ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியுள்ளது. ஆரஞ்சு ஆரஞ்சு மண்டலத்தில் இருந்த ராணிப்பேட்டை மாவட்டம் சிவப்பு மண்டலத்திற்கு மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.