Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் 1,200 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்…!

பொது முடக்கத்தால் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.

தெலுங்கானாவின் லிங்கம் பள்ளியில் தவித்த சுமார் 1,200 தொழிலாளர்கள் ரயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களின் சொந்த மாநிலமான ஹாதியாவுக்கு சுமார் 24 பெட்டிகளை கொண்ட ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஊரடங்கு காரணமாக பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். பல்வேறு இடங்களில் வெகுதூரம் நடைபயணம் மேற்கொண்டு சொந்த இடத்திற்கு வந்துள்ளனர். அதில் சில மரணங்களும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், பல்வேறு இடங்களில் தங்களை மீட்கக்கோரி இணையதளத்தில் வீடியோ பதிவினை வெளியிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்படுவதாகவும், அவர்களைப் பேருந்துகளில் அனுப்பி வைக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திர அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதற்காக மாநில, யூனியன் பிரதேச அரசுகள் தனி அதிகாரிகளை நியமித்து, அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

தங்கள் மாநிலங்களில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை பதிவு செய்து, அவர்களில் யாரெல்லாம் சொந்த ஊர் செல்ல விரும்புகிறார்கள் என்பதை கேட்டு அறியவேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. மத்திய அரசின் உத்தரவு படி, தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்க குழு அமைக்கப்பட்டு அவர்களின் விவரங்கள் சேகரிக்க பட்டுள்ளது. இந்த நிலையில், தெலுங்கானாவில் இருந்து சுமார் 1,200 தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க பட்டுள்ளனர்.

Categories

Tech |