Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரே தெருவை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா உறுதி: திருவல்லிக்கேணியில் பரபரப்பு..!

சென்னை திருவல்லிக்கேணியில் இன்று 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் பிள்ளை தெருவில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே தெருவை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா ஏற்பட்டதையடுத்து அந்த பகுதி முழுவதும் மூடப்பட்டுள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் தேஷ்முக் சேகர் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். தமிழகத்தில் நேற்று 161 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,323-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 138 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 906 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல சென்னையில் வியாபாரிகள் இருவருக்கு இன்று புதிதாக கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளது. அசோக் நகர், புதூரை சேர்ந்த காய்கறி வியாபாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் கோயம்பேட்டில் இருந்து காய்கறி வாங்கி வந்து விரிப்பை செய்தது தெரியவந்துள்ளது. சென்னையில் இதுவரை 5 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், இன்று மேலும் ஒரு உதவி ஆய்வாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை மாநகரம் கொரோனாவால் மோசமாக பாதிப்படைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |