கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 306.42 கோடி கிடைத்துள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கொரோனா தடுப்புப் பணிக்கு தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் நிவாரண நிதி வழங்க முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். அதனடிப்படையில் திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள்என பலரும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்புப் பணிக்கு தற்போது பெறப்பட்ட மொத்த தொகை ரூ.306.42 கோடி என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த 10 நாட்களில் ரூ.145.48 கோடி நிவாரண நிதி பெறப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனம் – ரூ. 5 கோடி, சுந்தரம் பாட்னர்ஸ் – ரூ.3 கோடி, ஐ.டி.சி எஜுகேஷன் – ரூ. 2 கோடி, அசோக் லேலண்ட், ஹிந்துஜா லேலண்ட் நிறுவனம் – 2.75 கோடி, அண்ணா பல்கலை., பதிவாளர் – ரூ.1.65 கோடி, தமிழ்நாடு வாணிப கழகம் – ரூ.1.02 கோடி, ஆச்சி மசாலா – 1.10 கோடி, தமிழக அரசு இ- பேமண்ட்ஸ் – ரூ.97.65 கோடி, சன்மார்க் குழுமம் – ரூ. 1 கோடி,
அதிமுக எம்எல்ஏக்களின் ஒரு மாத சம்பளம் – 97.65 லட்சம், தமிழ்நாடு மெக்னசைட் லிட் – ரூ.77.30 லட்சம், தீயணைப்புத்துறை – ரூ. 64.74, ஜி.ஆர். டி. தங்கமாளிகை – 62 லட்சம், லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சார்பில் 14 கோடியே 10 லட்ச ரூபாய், அதிமுக சார்பில் ரூ.1 கோடி, காமராஜர் துறைமுகம் சார்பில் ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ரூ. 1 கோடி, நடிகர் அஜித்குமார் ரூ.50 லட்சம், நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம், மேட்ரிமோனி டாட்காம் – ரூ.50 லட்சம், மதுரை மாவட்ட ஆட்சியர் – 32.37 லட்சம், தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர்கள் – 32.37 லட்சம், தமிழ்நாடு ஒய்வு பெற்ற ஆசிரியர்கள் – ரூ. 25 லட்சம், மேலும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பாக நிதிகள் வழங்கப்பட்டுள்ளன. நிவாரண நிதி வழங்கியவர்களுக்கு முதலமைச்சர் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.