Categories
சென்னை

கோயம்பேட்டில் கணக்குப்பிள்ளையாக இருந்தவருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 40ஐ தாண்டியது!

கோயம்பேட்டில் கணக்குப்பிள்ளையாக இருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கோயம்பேடு மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் இருவருக்கு கடந்த மூன்று நாளுக்கு  முன்னர் (27-03-2020)  கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கோயம்பேடு பூக்கடை வியாபாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதியான நிலையில் நேற்று முன்தினம் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் கோயம்பேடு சந்தையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று காலை கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு கொரோனா தொற்று உள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் கோயம்பேடு மார்க்கெட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கிச்சென்று விற்ற அசோக்நகரை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாலிகிராமத்தை சேர்ந்த கோயம்பேடு கூலி தொழிலாளிக்கு கொரோனா உறுதியானதையடுத்து அவரது மகன், மகளுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை கோயம்பேடு சந்தையில் கணக்குப்பிள்ளையாக வேலை செய்த மதுரவாயலை சேர்ந்த இளைஞருக்கு கொரோனா உறுதி செய்யப்படுள்ளது. முன்னதாக கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 38 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்யாகியானது 40க்கு மேல் உயர்ந்துளளது.

Categories

Tech |