Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்னும் 5 பேர் தான்….! ”வெல்ல போகும் நெல்லை” 6 பேர் டிஸ்சார்ஜ் ….!!

திருநெல்வேலியில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 2323 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 1258 பேர் குணமடைந்து, 28 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்திய அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக ஆறாவது இடத்தில் இருக்கும் தமிழகம், தரமான சிகிச்சை வழங்கி அதிகமானோரை குணப்படுத்தி வீடு அனுப்பி வருகிறது. அந்த வகையில் இந்திய அளவில் கொரோனா பாதித்த அதிகமானோரை குணப்படுத்திய மாநிலம் என்ற வரிசையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்கள் தொடர்ந்து குணமடைந்து வீடு திரும்பவதால் தமிழகத்தில் சில மாவட்டங்கள் கொரோனா இல்லாத மாவட்டங்களாக மாறி வருகிறது. அந்த வரிசையில் திருநெல்வேலி மாவட்டம் விரைவில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் 65 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 54 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 11 பேர் மருத்துவமணியில் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் தற்போது 6 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளார்.

நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 6 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்தனர். நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த தலா 3 பேர் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். இதனால் நெல்லையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 5ஆக குறைந்துள்ளது. அனைவரும் குணமடைந்து விரைவில் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்திருக்கின்றனர்.

Categories

Tech |