Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையை பாருங்க…! ”சிறப்பு அதிகாரி நியமனம்” தமிழக அரசு உத்தரவு …..!!

சென்னைக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையை பொருத்தவரை நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. சிறிது நேரத்திற்கு முன்பு கூட ஐஸ்ஹவுஸ் பகுதியில் 19 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்றும் இன்றும்  35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் சென்னையில் 200க்கு மேற்பட்ட தெருக்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னைக்கு கொரோனாதடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார். சென்னையில் நேற்று ஒரே நாளில் 138 பேர் பாதிக்கப் பட்டிருந்தார்கள். கடந்த 3 நாட்களில் மட்டும் 335 பேர் என கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கக்கூடிய காரணத்தால் தமிழக அரசு அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர்  ராதாகிருஷ்ணன் அவர்கள் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவும் வகையில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளும் மண்டல வாரியாக நியமிக்கபட்டுள்ளார்கள். ஐபிஎஸ் அதிகாரிகள் மகேஷ்குமார் அகர்வால், ஆபாஷ் குமார், அமரேஷ் பூஜாரி, அபய்குமார் சிங்க், பவானீஸ்வரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |