திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் அனைத்து விவசாயிகள் கடனும் இரத்து என்று புதிதாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முன்போக்கு கூட்டணி சார்பில் தி.மு.க , கா.ங், இடதுசாரிகள் , ம.தி.மு.க , வி.சி.க , ஐ.ஜே.கே , கொ.ம.தே.க மற்றும் இ.யூ.மு.லீ உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றது. இந்நிலையில் திமுக_வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் நேற்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வெளியிட்டார்.
நீட் தேர்வு இரத்து , கல்விக்கடன் இரத்து மற்றும் விவசாயிகள் கடன் இரத்து என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று இருந்த திமுக_வின் தேர்தல் அறிக்கையில் தற்போது சிறிய திருத்தம் மேற்கொள்ளபட்டு விவசாயிகளின் அனைத்து கடன்களும் இரத்து செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் வெற்றி பெற்றால் சிறு குறு பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமென்று தெரிவிக்கப்பட்டு இருந்தது . இந்நிலையில் தற்போது அனைத்து விவசாயிகள் கடனும் இரத்து என்று அறிவிக்கப்பட்டுளள்து .