Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

14 நாள் தனிமை ….! ”ஒரு நாளுக்கு ரூ.100” சென்னை மாநகராட்சி அதிரடி ….!!

 சென்னையில் விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மாநகராட்சி தமிழகத்திலேயே மிக அதிகமான கொரோனா நோய் தொற்று இருக்கும் ஒரு பகுதியாக இருக்கிறது. இதுவரை 906 நபர்கள் கொரோனா நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் மாநகராட்சி மற்றும் தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஒரு சுற்றறிக்கையை அறிவித்திருக்கிறார்.

விரைவில் சென்னையிலும் வண்ண பாஸ்கள் ...

அதில் ஊரடங்கு காலத்தில் கடைகள் மதியம் ஒரு மணிவரை தான் செயல்பட வேண்டும். அதை மீறி செயல்படக்கூடிய கடைகள் வணிக நிறுவனங்கள் எதுவாக இருந்தாலும் அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பொது இடங்களில் வரக்கூடிய மக்கள் ஒருவர் பின் ஒருவர் என்று சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். பொது இடங்களில் கிரிமி நாசினி ஏற்பாடு செய்ய வேண்டும். ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் வெளியே சுற்றினால் நாளொன்றுக்கு 100 ரூபாய்  அபராதம் வித்தது 14 நாட்கள் அவர்கள் தனிமைப் படுத்தப் படுவார் என்று சொல்லப்பட்டுள்ளது.

ரங்கநாதன் தெருவில் சிறிய கடைகள் ...

கொரோனவை கட்டுப்படுத்தும் நோக்கோடு இது மிகக் கடுமையான நடவடிக்கையாக இருக்கும் என்று சொல்லப்பட்டுகின்றது. அது மட்டுமல்லாம செயல்படக்கூடிய அரசு அலுவலகங்கள், அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் நிறுவனங்கள்  2 மணி நேரத்துக்கு ஒருமுறை கிருமிநாசினியை வைத்து நன்கு சுத்தம் செய்ய வேண்டும் என்ற ஒரு முக்கியமான அறிவிப்புகளை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |