தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது.
சென்னை மாநகராட்சி தமிழகத்திலேயே மிக அதிகமான கொரோனா நோய் தொற்று இருக்கும் ஒரு பகுதியாக இருக்கிறது. இதுவரை 906 நபர்கள் கொரோனா நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் மாநகராட்சி மற்றும் தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஒரு சுற்றறிக்கையை அறிவித்திருக்கிறார்.
அதில் சென்னையில் கடும் விதிமுறைகள் உடனே அமலுக்கு வருகிறது.
2 நபர்களுக்கு இடையே கண்டிப்பாக 1 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
பணிக்கு செல்வோர் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்.
சென்னையில் தேவையின்றி வெளியில் சுற்றினால் 14 நாட்கள் தனிமையில் வைக்கப்படுவார்கள்.
100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிப்பு
சென்னையில் பொதுமுடக்க காலத்தில் விதிகளை மீறி செயல்படும் கடைகள், நிறுவனர், அலுவலகங்கள் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து சென்னை மாநகராட்சி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சாட்டையை சுழற்றியுள்ளது.