6 பிள்ளைகளின் தந்தையான என்எஸ்எஸ் மருத்துவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் குடியேறிய இரண்டே மாதங்களில் என்எஸ்எஸ் மருத்துவர் கொரோனாவிற்கு பலியான சம்பவத்தால் குடும்பத்தார் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட ஃபர்கான் அலி சித்திகி தனது குடும்பத்தின் நிலையை உணர்ந்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்தார். பிரித்தானியாவில் மான்சேஸ்டெர் ராயல் மருத்துவமனையில் பணியாற்றி வந்த ஃபர்கான் அலி சித்திகி இரண்டு மாத பயிற்சியில் இருந்து வந்துள்ளார்.
பாகிஸ்தானில் 10 வருடங்கள் மருத்துவராகப் பணியாற்றிய ஃபர்கான் அலி சித்திகி ஆறு இளம் வயது பிள்ளைகள் மனைவி மற்றும் வயதான பெற்றோரை பற்றி யோசித்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்து உள்ளார். மான்சேஸ்டெர் மருத்துவமனையில் பணியாற்றிய பொழுது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 4 வாரங்கள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி தற்போது ஃபர்கான் அலி சித்திகி மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். பிரித்தானியா முழுவதும் 27000 பேர் பலியான நிலையில் என்எஸ்எஸில் கொரோனாவால் பலியாகும் 15 ஆவது மருத்துவர் ஃபர்கான் அலி சித்திகி ஆவார்