டியூஷன் போகச் சொன்ன பெற்றோர்களை காவல்துறையினரிடம் சிறுவன் சொல்லிக்கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் ஒன்றுதான் ஊரடங்கு. மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுவன் ஒருவன் தன்னை டியூசனுக்கு போகச்சொல்லி பெற்றோர்கள் வலியுறுத்துவதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
பெற்றோர் மீது புகார் அளித்தது மட்டுமல்லாமல் காவலர்களை கையோடு தனது வீட்டிற்கும் அழைத்துச் சென்றுள்ளார். வீட்டிற்கு வந்த காவல்துறையினர் பெற்றோர்களை சராமாரியாக கேள்வி கேட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.