Categories
தேசிய செய்திகள்

நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்… “சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு ரயில்கள்”..!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. தற்போது 38வது நாளாக அமலில் உள்ளது. இதன் காரணமாக, பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

பல்வேறு இடங்களில் வெகுதூரம் நடைபயணம் மேற்கொண்டு சொந்த இடத்திற்கு வந்துள்ளனர். அதில் சில மரணங்களும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், பல்வேறு இடங்களில் தங்களை மீட்கக்கோரி இணையதளத்தில் வீடியோ பதிவினை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்படுவதாகவும், அவர்களைப் பேருந்துகளில் அனுப்பி வைக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திர அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

இதற்காக மாநில, யூனியன் பிரதேச அரசுகள் தனி அதிகாரிகளை நியமித்து, அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து அனைத்து மாநிலங்களும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும், இன்று காலை தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சுமார் 1,200 தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலமான ஹாதியாவுக்கு ரயிலில் அனுப்பிவைக்கப்பட்டனர். இதையடுத்து மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் அனைத்து தொழிலாளர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Categories

Tech |