Categories
தேசிய செய்திகள்

ஆரஞ்சு மண்டலங்களில் தளர்வுகள் என்ன?

ஆரஞ்சு மண்டலங்களில் மாவட்டங்களுக்கு இடையே அனுமதி பெற்று மக்கள் வாகனங்களில் செல்லலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக அதிகரித்து வருவதால் இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வருகின்ற மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மே 4ஆம் தேதி முதல் மே 17 ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் தளர்வுகள் எதுவும் இல்லை. பச்சை, ஆரஞ்சு பகுதிகளுக்கு அதிகளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என பிரிக்கப்பட்டு அதற்கேற்ப நெறிமுறைகள் அமல்படுத்தப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது..

அதன்படி, கொரோனா பாதிப்பு சற்று குறைவாக உள்ள ஆரஞ்சு மண்டலங்களில்  மாவட்டங்களுக்கு இடையே அனுமதி பெற்று மக்கள் வாகனங்களில் செல்லலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, 4 சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் 3 பேரும், இரு சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் 2 பேரும் செல்லலாம். வாடகை காரில் ஒரு பயணியுடன் காரை இயக்கலாம் என்றும்  உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |