கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் புதிய நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதில், நாடு முழுவதும் 130 மாவட்டங்ள் சிவப்பு மண்டலமாகவும், 284 மாவட்டங்ள் ஆரஞ்சு மண்டலமாகவும், 119 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
அதில், கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் கூடுதலாக சில தடைகள் விதிப்பு பேருந்துகள், சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்க தடை தொடரும் சைக்கிள் ரிக்ஷா, ஆட்டோ, கார் இயக்கத்தடை விதிக்கப்ட்டியுள்ளது. அதே போல் கொரோனா பாதிப்பில்லாத பச்சை மண்டலங்களில் மதுக்கடைகள், பீடா கடைகளைத் திறக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் மதுக்கடைகளில் 6 அடி இடைவெளி பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், மதுக்கடைகளில் ஒரு சமயத்தில் ஐந்து பேருக்கு மேல் அனுமதிக்கக்கூடாது என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.