மிதுனம் ராசி அன்பர்களே …! வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்கும் நாளாக இருக்கும். ஊர் மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உறவினர் பகை அகலும் பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் வந்து சேரலாம். குறிக்கோள்களை அடைவதை லட்சியமாகக் கொண்டு செயல்படுவீர்கள். புதிய தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும்.
கணவன் மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதங்கள் கூட ஏற்படலாம். வேலை நிமிர்த்தமாக குடும்பத்தை விட்டு வெளியே தங்க நேரிடும் கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள். வெளியில் தங்கும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள் மிக முக்கியமாக வெளியூர் பயணத்தில் கவனமாக இருங்கள். பெரும் செலவுகள் ஏற்படும். யாரிடமும் கடன்கள் மட்டும் வாங்க வேண்டாம்.
செலவை கட்டுப்படுத்துவதற்கு கூடுமானவரை முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.