Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு… தனவரவு சிறப்பாகும்… மனக்குழப்பம் அதிகரிக்கும்…!

 

கடகம் ராசி அன்பர்களே …!   இன்று நண்பர்களால் உங்களுக்கு மனக்கசப்புகள் ஏற்படும். தேவை இல்லாத விஷயத்தை நினைத்து நீங்கள் குழப்பிக்கொள்ள வேண்டாம். தனவரவு பொருத்தவரை ஓரளவு சிறப்பாக தான் இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் எடுத்தோம் முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். தேவையில்லாத விஷத்திற்கு கோபப்படுவீர்கள். இன்று புதிய முயற்சிகளை மட்டும் தயவு செய்து தள்ளிப்போடுங்கள்.

கவனமாக காரியங்களை எதிர்கொள்ளுங்கள் மனகுழப்பம் கொஞ்சம் அவ்வப்போது வந்து செல்லும். ஆனால் தைரியமாக இருப்பது மட்டும் ரொம்ப நல்லது. செலவினை  குறைத்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்திடுங்கள். இன்று ஓரளவு சிக்கல்களும் தீரும் என எண்ணிய காரியம் கைவிடுவதற்கு கடுமையாக உழைப்பீர்கள். குறிக்கோள்கள் ஓரளவு நிறைவேறும். உங்களுடைய முன்னேற்றத்திற்கு உதவியாக இருந்ததை நினைத்து பெருமை கொள்வீர்கள்.

இன்றைய நாள் உங்களுக்கு ஓரளவு சிறப்புமிக்க நாளாக இருக்கும். இருந்தாலும் இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய ரொம்ப நல்லது. வெள்ளை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |