பாம்பையும் அதன் பித்த பையையும் பச்சையாக சாப்பிட்ட இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை எடுத்து வருகிறார்
சீனாவில் கொரோனா பரவி பல உயிர்களை எடுத்து தற்போது கட்டுக்குள் வந்துள்ள நிலையில் வாங் என்ற இளைஞர் திடீரென மூச்சு விட முடியாமல் மருத்துவமனைக்கு சிகிச்சை எடுக்க சென்றுள்ளார். அப்போது மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் வாங்கிடம் என்ன உணவு சாப்பிட்டதாக கேட்டுள்ளனர். அதற்கு இளைஞர் நத்தைகள் மற்றும் கடல் உணவுகள் சாப்பிட்டதாக கூறியுள்ளார். இருந்தும் மருத்துவர்களுக்கு சந்தேகம் இருந்ததால் நன்றாக ஞாபகப்படுத்திக் கூறும்படி மீண்டும் கேட்டுள்ளனர். பின்னர் யோசித்த இளைஞர் கூறிய பதிலை கேட்டு மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
இளைஞர், ஆமாம் பாம்பை பச்சையாக சாப்பிட்டேன் என்றும் பாம்பின் பித்தப்பையை பச்சையாக சாப்பிட்டதாகவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் உடனடியாக ஸ்கேன் எடுத்துப் பார்த்த பொழுது இளைஞனின் நுரையீரலில் சிறுசிறு புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ந்தனர். உயிரினங்களை பச்சையாக சாப்பிடுவதால் அதில் இருக்கும் புழுக்களின் முட்டைகள் உடலுக்குள் சென்று பின்னர் அதுவே கொடிய நோயாக மாறிவிடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது பாம்பை பச்சையாக சாப்பிட்டு விட்டு அதில் இருக்கும் புழுக்கள் நுரையீரலில் தங்கியதால் இளைஞர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.