Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…செல்வாக்கு மேலோங்கும்…லாபம் அதிகரிக்கும்…!

 

கும்பம் ராசி அன்பர்களே …!  செல்வாக்கும் மேலோங்கும் நாளாக இருக்கும். செய்தொழில் சில மாற்றங்களைச் செய்யும் எண்ணம் உருவாகும். அரசு வழியில் எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். பயணங்கள் ஓரளவு அலைச்சலை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சின் மூலம் தங்களது வியாபாரத்தை லாபகரமாக செய்வார்கள். தேவையான பண உதவிகள் கிடைக்கப் பெறும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக உழைப்பும் அதற்கேற்ப பலனும் உண்டாகும். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நன்மையை கொடுக்கும். இன்று காதலர்களுக்கு சிறப்பான நாளாக அமையும். அதே போல கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொள்ளுங்கள். இளம் சிவப்பு நிறம்  உங்களுக்கு  அதிஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு தானமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று நல்ல செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்கள்:1 மற்றும் 2

அதிஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |