இந்த வாரத்தின் இறுதியில் கிம் ஜாங் உன் இறந்த தகவல் வெளிவரும் என வடகொரிய சமூக ஆர்வலர் ஜி சியோங் தெரிவித்துள்ளார்
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அறுவைசிகிச்சை செய்து கொண்டதாகவும், அதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமானதாகும், கோமாவிற்கு சென்றுவிட்டதாகவும், ஏன் மரணம் அடைந்து விட்டதாகவும் கூட பல செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த செய்திகளை தென்கொரியா தொடர்ந்து மறுத்து வந்தது. இந்நிலையில் வடகொரியா சமூக ஆர்வலர் ஒருவர் கிம் ஜாங் கண்டிப்பாக உயிரிழந்துவிட்டார் என்று நான் உறுதியாக நம்புவதாகவும் இந்த வாரத்தின் இறுதியில் அது குறித்த முக்கிய தகவல் வெளிவரும் எனவும் தெரிவித்துள்ளார்.
ரகசியமாக வடகொரியாவில் இருந்து வெளியேறி தென்கொரியாவில் வாழ்ந்துவரும் ஜி சியோங் என்பவர் தான் இந்த தகவலை தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தின் இறுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட கிம் அன்றே மரணம் அடைந்ததாகவும் இவர் உறுதியாக கூறியுள்ளார்.கிம் ஜாங் இறந்த பின்னர் ஆட்சியை அவரது சகோதரி நடத்துவது உறுதியாகியுள்ளது. இருந்தும் வடகொரியாவின் உயர்மட்ட தலைவர்கள் மத்தியில் பதவி குறித்த போர் தொடங்கி விட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி கட்சி கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட கிம் அதன் பின்னர் இதுவரை வெளியில் வரவில்லை. வடகொரியாவின் தந்தையான தனது தாத்தாவின் பிறந்த நாள் விழாவிலும் அவர் பங்கேற்கவில்லை. இதனை தொடர்ந்தே அவர் இறந்து விட்டதாகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகத் தொடங்கின. இதுகுறித்து சர்வதேச பத்திரிகைகள் வெளியிடும் செய்திகளுக்கு வடகொரியா இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை. இதனிடையில் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் கிம் கையெழுத்திட்ட அரசாணை ஒன்று பிறப்பித்த தகவல் வெளியானது.
ஆனால் ஜி சியோங் கிம் ஜாங் அறுவை சிகிச்சைக்கு பின்னர் மரணமடைந்துவிட்டார் என உறுதியாக தெரிவிக்கின்றார். வடகொரியாவில் இருக்கும் நட்பு வட்டம் மூலம் தனக்கு இந்த தகவல் கிடைத்ததாகவும் கூறியுள்ளார். அதோடு சில ஆண்டுகளாக ஆட்சி குறித்து அனைத்து விவகாரங்களிலும் கிம்முடன் முன் வரிசையில் நிற்கும் கிம் யோ கண்டிப்பாக அடுத்த தலைவராக வருவார் எனவும் ஜி சியோங் தெரிவித்துள்ளார்