நாம் மண்பானையை கொண்டு யாழ்ப்பாணத்து ஸ்டைலில் பாரை கருவாட்டு குழம்பு எப்படி செய்வது என்பதை தான் பார்க்க போகிறோம்.
நமது முன்னோர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிக முக்கிய காரணம் அவர்கள் வாழ்வியல் முறையில், பாரம்பரியமான உணவு பழக்கம் தான். அந்த காலங்களில் மண்பானை சமையல் செய்து சாப்பிட்டால் உணவிற்கு கூடுதல் சுவை அளிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.
தேவையானவை:
கருவாடு – அரை கிலோ
உருளைக்கிழங்கு – கால் கிலோ
வெங்காயம் – 4
தக்காளி – 3
பூண்டு – 1
பச்சை மிளகாய் – 4
மிளகாய்த்தூள் – 5 தேக்கரண்டி
புளி கரைசல் – தேவையான அளவு
தேங்காய்ப்பால் – ஒரு கப்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
கருவாட்டை சுடு நீரில் அலசி எடுத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு, கறி மிளகாய் அனைத்தையும் துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். மண் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு பொரிந்ததும், பெருஞ்சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும், பச்சை மிளகாய், பூண்டு, கருவேப்பிலை போட்டு 2 நிமிடம் வதக்கி, தக்காளியை சேர்க்கவும். தக்காளி போட்டு சிறிது நேரத்தில் வெந்தயம் போட வேண்டும் பின்னர் உருளைக்கிழங்கு போட்டு நன்றாக கிளறி, உருளைக்கிழங்கு வதங்கியதும் மிளகாய் சேர்க்கவும். அதன் பின்னர் கருவாடு துண்டுகளை போட்டு மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
பெரும்பாலும் கருவாட்டு குழம்பு உப்பு சேர்க்க தேவையில்லை, தேவை என்றால் சிறிதளவு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் புளிக்கரைசல் சேர்த்து, கொதித்ததும் தேங்காய்ப்பால் சேர்த்து மூடி போட்டு கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான யாழ்ப்பாணக் கருவாட்டு குழம்பு ரெடி….!