அரியலூரில் புதியதாக 19 பேருக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அம்மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்திலிருந்து சிவப்பு மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு மாவட்டத்திலிருந்து சொந்த ஊரான அரியலூர் மாவட்டத்திற்கு திரும்பிய 19 நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சிகப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று மண்டலங்களாக பிரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன்படி,
கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டமாக ஆரஞ்சு மண்டலத்தில் இடம் பெற்றிருந்த அரியலூரில், தற்போது புதியதாக 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்ந்ததையடுத்து அரியலூர் மாவட்டம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.