கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்த 26 தொழிலாளர்களுக்கு இதுவரை கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு பணிபுரிந்த 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையின் முக்கிய இடமாக கருதப்படும் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சொந்த ஊரான கடலூர் திரும்பிய ஏழு தொழிலாளர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 7 பேரும் சிதம்பரம் அண்ணா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏற்கனவே இன்று காலை அரியலூர் மாவட்டத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்த 19 தொழிலாளர்களுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதை கணக்கில் கொண்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்த 600 தொழிலாளர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பணிபுரிந்து வந்த சூழ்நிலையில், தமிழகம் முழுவதுமே இச்சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.