Categories
தேசிய செய்திகள்

முகாமில் தங்கியிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் 68 பேருக்கு கொரோனா உறுதி…!

கிழக்கு டெல்லியில் சி.ஆர்.பி.எப் முகாமில் இருந்த 68 வீரர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் 37 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,293 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 71 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 39வது நாளாக அமலில் உள்ளது.

ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,043 லிருந்து 37,336 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,147 லிருந்து 1,218- ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 8,889 லிருந்து 9,951 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் இதுவரை 3,738 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,094 பேர் கொரோனாவில் இருந்து குணப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இன்று முகாமில் தங்கியிருந்த 68 சிஆர்பிஎப் வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

Categories

Tech |