சந்திரமுகி 2-ம் பாகத்தில் நடிகை ஜோதிகா நடிப்பாரா? என எதிர்பார்க்கபடுகிறது.
2005ம் ஆண்டு வெளியாகி வசூல் குவித்த படம் தான் சந்திரமுகி. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை ஜோதிகா, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என பலரும் நடித்திருந்தனர். இப்படத்தை பி.வாசு இயக்கி இருந்தார். இப்படம் முன்னாடியே ஷோபனா, மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் மணிசித்ரத்தாளூ என்றும், கன்னடத்தில் விஷ்ணுவர்த்தன், சவுந்தர்யா நடிப்பில் ‘ஆப்தமித்ரா’ என்ற பெயர்களிலும் வெளியாகி பெருமளவில் வெற்றி பெற்றன.
அதன்பிறகு தமிழில் ‘சந்திரமுகி’ பெயரில் இப்படம் ரீமேக் ஆனது. இப்பொழுது சந்திரமுகி-2 தயாராக இருக்கிறது. இப்படத்தில் மனோதத்துவ டாக்டராக ரஜினிகாந்த் ஆரம்பத்தில் வருவார். பின்னர் கிளைமாக்சில் வேட்டையன் மன்னனாக நடிப்பில் வருவார். அந்த மன்னரால் கொலை செய்யப்படும் சந்திரமுகி, ஜோதிகாவின் உடலுக்குள் ஆவியாக புகுந்து பழிவாங்க துடிப்பது போன்று திரைக்கதை அமைந்திருக்கும். இந்த படத்தில் ஜோதிகாவின் நடிப்பு அருமையாக பேசப்பட்டது.
இந்நிலையில் சந்திரமுகி 2ல் வேட்டையன் மன்னருக்கும், சந்திரமுகிக்கும் உண்டாகும் மோதலை வைத்து படமாக்க போவதாகவும், அதில் வேட்டையன் மன்னனாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக பி.வாசு கூறியுள்ளார். ஆனால் இப்படத்தில் சந்திரமுகியாக நடிக்க இருப்பது யார்.? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சந்திரமுகி கதாபாத்திரத்திற்கு நடிகை ஜோதிகா பொருத்தமாக இருப்பார் என்று கூறப்படுகிறது.
அதனால் ஜோதிகாவை இரட்டை வேடமாக உருவாக்கி, அதில் ஒரு கதாபாத்திரத்தை சந்திரமுகியாக மாற்றி நடிக்க வைக்க இருப்பதாக பேச்சு வார்த்தை நடக்கிறது என தகவல் பரவியுள்ளது. ஆனால் இப்படத்தில் ஜோதிகா நடிப்பாரா? என்பது உறுதி ஆகவில்லை. இருப்பினும் ஜோதிகா நடித்தால் சூப்பராக இருக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.