Categories
சென்னை மாநில செய்திகள்

கோயம்பேடு சந்தையில் இருந்து சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50ஆக உயர்வு!

கோயம்பேடு சந்தையில் இருந்து சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கோயம்பேடு மார்க்கெட் இயங்கி வருகிறது.  இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் இருவருக்கு கடந்த 27ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கோயம்பேடு பூக்கடை வியாபாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதியான நிலையில் 30ம் தேதி மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

1ம் தேதி காலை கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு கொரோனா தொற்று உள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் கோயம்பேடு மார்க்கெட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கிச்சென்று விற்ற அசோக்நகரை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சாலிகிராமத்தை சேர்ந்த கோயம்பேடு கூலி தொழிலாளிக்கு கொரோனா உறுதியானதையடுத்து அவரது மகன், மகளுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை கோயம்பேடு சந்தையில் கணக்குப்பிள்ளையாக வேலை செய்த மதுரவாயலை சேர்ந்த இளைஞருக்கு கொரோனா உறுதி செய்யப்படுள்ளது.

கோயம்பேடு பூக்கடையில் இருந்து வாங்கிவந்து வடபழனி கோயில் வாசலில் பூ விற்ற 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதேபோல கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்த தேனாம்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது மேலும் அந்த மாணவனின் தாய், அதே தெருவை சேந்த கல்லூரி மாணவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கோயம்பேட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |