சிறப்பு ரயில் ஏற்பாடு செய்ய கோரி சென்னையில் வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடங்கியவுடன் அனைத்து நிறுவனங்கள், மூடப்பட்டு தொழில்கள் முடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வெளி மாநிலங்களுக்கு சென்று பணியாற்றிய அனைவரும் வேலை இழந்து தங்குமிடம் இல்லாமல் தவித்தனர். நிறுவனங்களில் பணியாற்றியவர்களை அந்தந்த நிறுவனங்களே பராமரிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதையடுத்து தமிழகத்தில் உடனடியாக முகாம்கள் அமைக்கப்பட்டு வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் புலன்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்ப ரயில்கள் இயக்கப்பட்டு அவர்களது ஊர்களுக்கு அனுப்பி வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் லட்சக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இதனை எதிர்த்து சென்னை வேளச்சேரியில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி, போலீசாரின் வாகனம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திடீரென ஏராளமானோர் ஒரே இடத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிறப்பு ரயில் ஏற்பாடு செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரிக்கை வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.