Categories
தேசிய செய்திகள்

உற்பத்தியை அதிகரிக்க….. 6 மாநிலங்களில் புதிய சட்டம்…. அதிர்ச்சியில் தொழிலாளர்கள்…!!

ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் 12 மணிநேரம் தொழிலாளர்கள் வேலை பார்க்க வேண்டுமென சட்டம் இயற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு போராடி இரத்தம் சிந்தி 8 மணி நேர வேலையை வாங்கினர். அதை கொண்டாடும் விதமாக மே 1 அன்று உலக அளவில் உழைப்பாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் உலகத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தங்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து ஊர்வலம் வந்து கொண்டாடுவது வழக்கம்.

இதனை இந்தியாவில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் இந்தியாவில் சட்டம் ஆக்கினார். ஆனால் தற்போது அத்தனைபேர் பட்ட கஷ்டமும் வீண் ஆகும்படி, இந்தியாவின் 6 மாநிலங்களில் புதிய சட்டம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அதில், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட 6 மாநில அரசுகள், தொழிலாளர்கள் வேலை பார்க்கும் நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தி அறிவித்து சட்டம் இயற்றியுள்ளது.

குறைவான தொழிலாளர்களை வைத்து வேலை பார்ப்பதாலும், ஷிப்ட் நேரம் குறைக்கப்பட்டதாலும் உற்பத்தியை அதிகரிப்பதற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டு உள்ளதாக அம்மாநில அரசுகளின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்ட போதிலும், இது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |