Categories
உலக செய்திகள்

20 ஆண்டுகளாக இப்படிதான் நடக்கிறது… 4,000 கிலோ போதைப்பொருளுடன் சிக்கிய கப்பல்… நாட்டின் தலைவர் மீது கடும் கோபத்தில் அமெரிக்கா!

4000 கிலோ போதைப் பொருட்களுடன் சிக்கிய கப்பலுக்கும் வெனிசுவேலா அதிபருக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது

ஸ்பெயின் கடற்கறையில் 4000 கிலோ போதைப் பொருட்களுடன் சிக்கிய கப்பலுக்கும் வெனிசுவேலா அதிபருக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்கா உறுதி செய்துள்ளது. கப்பலில் இருக்கும் போதைப் பொருட்கள் கொலம்பியா கடத்தல்  கும்பலுடன் தொடர்பு உள்ளது என கொலம்பியா செய்தித்தாள் செய்தி வெளியிட்டது.

கொலம்பியாவை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்  கும்பலுக்கு உதவி செய்வதாகவும் 250 டன் போதைப்பொருட்களை நாட்டிற்குள் கொண்டு செல்ல முயற்சி செய்ததாகவும் வெனிசுவேலா அதிபர் Maduro அமெரிக்கா கைது செய்வதற்கான வாய்ப்பை தேடிக் கொண்டிருக்கின்றது.

அதோடு அவரது தலைக்கு 15 மில்லியன் டாலர் விலையும் நிர்ணயம் செய்துள்ளது அமெரிக்கா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல டன் போதைப்பொருட்களை அமெரிக்காவுக்கு கொண்டு வரும் முயற்சியில் Maduro மற்றும் அவரது கும்பல் ஈடுபட்டதாக சந்தேகம் உள்ளது என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பில் பார் தெரிவித்திருக்கின்றார்.

Categories

Tech |