சென்னை மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை வார்ட் படுக்கைகளை அனைத்தும் நிரம்பியுள்ளன.
தமிழகத்தில் கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை விளங்குகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் தொடர்புடைய பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் தகவல் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கும் நிலையில் தற்போது மேலும் அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் கொரோனாவின் தாக்கத்தை முழுவதும் கட்டுப்படுத்தியாக வேண்டிய சூழல் தலைநகர் சென்னைக்கு வந்துள்ளது. சென்னையில் கடந்த 4 நாட்களாக மட்டும் கொரோனாவின் பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்ததால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் இருந்த கொரோனா சிகிச்சை வார்ட்கள் அனைத்தும் நிரம்பி இருக்கின்றன.
அனைத்துப் படுக்கைகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களால் நிரப்பப்பட்டுள்ளதால் இரு மருத்துவமனைகளிலும் புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களை சேர்ப்பதற்கான வாய்ப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் கூட தமிழக அரசு மக்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை வழங்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.