மத்திய அரசு அறிவித்திருந்த ஊரடங்கு தமிழகத்திலும் தொடரும் என தமிழக அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது.
தமிழக அமைச்சரவை கூட்டம் 2 மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியாகி இருக்கின்றது. முதலமைச்சரின் அறிக்கையாக இது வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் வரும் 17ம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. அதே நேரத்தில் நேற்று மத்திய அரசு கொடுத்த சில தளர்வுகள் பின்பற்றப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.மேலும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம். கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படும்
. சென்னையில் கட்டுமானப் பணிகள், சாலைப் பணிகளுக்கு அனுமதி. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை. அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை பார்சல்கள் மட்டும் வழங்கலாம் என்று மத்திய அரசு சொல்லி இருந்த அதே நடைமுறைகள் தமிழகத்திலும் அமுலாகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.