சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், ஊரடங்கு குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்திலும் ஊரடங்கை வரும் 17ம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக அறிக்கை ஒன்றை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
* நோய் கட்டுப்பாடு பகுதிகளில் ஊரடங்கு தளர்வு இல்லை.
* சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டுமான பணி, சாலை பணிகளுக்கு அனுமதி.
* கட்டுமான பணி நடக்கும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும்பட்சத்தில் பணிகள் செய்ய அனுமதி.
* மே 17ம் தேதி வரை அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி
* சென்னையில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்படுவதற்கு அனுமதி இல்லை.
* சென்னையில் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம்.
* ஹார்டுவேர், சிமெண்ட், எலெக்ட்ரிக், பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 11 மணி முதல் 5 மணி வரை இயங்கலாம்.
* 50 சதவிகித பணியாளர்களை கொண்டு (குறைந்தபட்சம் 20 நபர்கள்) மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியிலுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி.
* அச்சகங்கள் செயல்பட அனுமதி.
* செங்கல் சூளைகள், கல்குவாரிகள், எம்-சாண்ட், கிரஷர்கள் மற்றும் அவற்றிற்கான போக்குவரத்துக்கு அனுமதி.
* ஐடி நிறுவனங்கள் குறைந்தபட்சம் 20 பேரைக் கொண்டு செயல்பட அனுமதி.
* மே 4 முதல் மே 17 நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு கடைபிடிக்கப்படும்.
* கிராமப்புறங்களிலுள்ள நூற்பாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.
* நகராட்சி, மாநகராட்சிகளில் மால்கள், வணிக வளாகங்களை தவிர்த்து தனிக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை இயங்கலாம்.
* தொழிற்பேட்டையிலுள்ள ஜவுளி நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லை.
* சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், கிராமப்புற தொழில்கள், தனிக்கடைகள் செயல்பட அனுமதி தேவையில்லை.
* மொபைல் கடைகள், வீட்டு உபயோக பொருள் கடைகள், மின் மோட்டார் உள்ளிட்ட தனிக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்படலாம்.
* பிளம்பர், எலக்ட்ரீசியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்டோர் மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று பணிபுரியலாம்.
* திரையரங்கு, மதுக்கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், கடற்கரை, சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவைக்கு தடை தொடரும்.
* பள்ளிகள், கல்லூரிகள், வழிகாட்டுதல் தலங்களில் பொது மக்கள் வழிபாடு, அனைத்து மதம் சார்த்த கூட்டங்களுக்கும் தடை தொடரும்.
* விமான, ரயில், பொது போக்குவரத்து, டாக்ஸி, ஆட்டோக்களுக்கு தடை தொடரும்.
* மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்துக்கு தடை தொடரும்.
* திருமண நிகழ்ச்சிக்கு தற்போதுள்ள நடைமுறைகள் தொடரும்.